The etymology of the word ‘Universe’
- Dr.G.Arasendiran
- Sep 6, 2020
- 1 min read
Updated: Feb 21, 2021
அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இம் மூன்றாம் சொற்பொழிவாகும்.
'ஒன்று-வட்டம்' ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வு வெளிச்சத்தில் விளக்குகிறார்.
ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன் மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form) மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனில் unus என்று திரிந்து அதே ஒன்றினைக் குறித்தது. வட்டம் என்ற வளைவைக் குறிக்கும் தமிழ்ச்சொல் wer என தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக மாறி அதே வளைவுப் பொருளில் இலத்தீனில் versus எனத் திரிந்தது. versus ஆகிய இவ் வளைவு verse எனத் திரிந்து ஆங்கிலம் ஆகியது. ஒன்று ஆகிய unus சொல்லும் verse ஆகிய வளைவுச் சொல்லும் சேர்ந்தே இறுதியில் universe என்ற சொல்வடிவம் ஆகியது. turn in to one என்பதே universe சொல்லின் மூலப் பொருளாகும்."ஒன்று -unus" ஆகி" வட்டம்-vert-verse எனவாகி இரண்டும் சேர்ந்து universe ஆனதை ஓர் மெய்யியல் உரையாக 26.09.2020 அன்று அரசேந்திரனாரின் குரலில் கேளுங்கள்.


Comments