top of page

ABOUT DR. G. ARASENDIRAN

இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் உள்ள கொக்கரணை என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் குருசாமி என்பதாகும். உள்கோட்டையில் தொடக்க, உயர்நிலைக்கல்வி பயின்ற இவர் பூண்டி திருபுட்பம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயன்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணத்தில் உவமைகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்தில் தென்மொழி ஏடுகளைக் கற்றும் பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈர்ப்புண்டும் தமிழாய்வு செய்தவர். சொல்லாய்வறிஞர் அருளியார் அவர்களின் நூல்களை நன்கு படித்தறிந்து அவரது தொடர்பில் அறிவை வளர்த்து கொண்டவர். இவரின் கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல், உயிர்க்கதறல் (பாட்டு நூல்)உள்ளிட்டவை புகழ் பெற்ற நூல்களாகும். வேர்ச்சொல்லாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஈழத்து அறிஞர் ஈழவேந்தன் அவர்களின் திருமகளார் யாழினி அவர்கள் இவரின் வாழ்க்கைத் துணைவியார் ஆவார். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

Contact
Dr.G.Arasendiran-01.jpeg
About: About
bottom of page